பசுமைக் கூடாரம்

நமது வேளாண்மை தொழில் நுட்பம் 200 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், புதிய தொழில் நுட்பமாக உள்ள பசுமைக் கூடாரத்தில் பயிர் சாகுபடி முறை மிகவும் பலன்தரும் வழிமுறையாக உள்ளது.

நமது நாட்டில் 35 சத பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில வகைப் பயிர்களை எல்லா வித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. இந்தப் பயிர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே எந்த இடங்களிலும் இந்தப் பயிர்களை வளர்க்க முடியும்

பசுமைக் கூடாரம் 

பசுமைக் கூடார தொழில் நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுப்புறச் சூழலை வழங்குவதேயாகும். காற்று. குளிர். மழை அதிகப்படியான சூரிய ஒளி. அதிக வெப்பநிலை. பூச்சி நோய்களிலிருந்து செடிகளைப் பாதுகாக்க இந்த தொழில் நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது.

பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக் கூடிய அல்லது பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இந்தக் கூடாரத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்கு தேவையான தட்ப வெப்பநிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமில வாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
இதக் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளை பொருள்களும் கிடைக்கின்றன. மேலும் மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்திலேயே தங்கி விடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்பாசனமே தேவைப்படும்.

பயன்கள் – நன்மைகள்

பூச்சி நோய், எலிகள் மற்றும் பறவைகள் பயிரைத் தாக்குவதிலிருந்து பாதுகாக்கலாம். அதிகமான வெப்பம், பெரும் மழை அதிகக் காற்றுகளால் பயிருக்குச் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகள். பூசனக் கொல்லிகள் . உரங்கள் ஆகியவை சரியான அளவில் உபயோகிக்கலாம். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் உற்பத்தி செய்யலாம். சந்தையில் பருவமில்லா காலத்தில் வரும் விளைபொருளுக்கு அதிக வரவேற்பும் அதிக விலையும் கிடைக்கும் எனவே அத்தகைய தருணத்தில் பசுமைக் கூடார உற்பத்தி முறை பெரிதும் உதவியாக இருக்கும். காய்கறிகளைப் பதப்படும் தொழில்சாலைகளுக்குத் தேவையான காய்கறிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்க முடியும்.

Leave a comment