சத்தான கம்பு சேமியா புலாவ்

சத்தான கம்பு சேமியா புலாவ்

தேவையான பொருட்கள் :

கம்பு சேமியா – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சீரகம் – ½ டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கிராம்பு – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
பட்டை – 1 இன்ச் அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கேரட் – 100 கிராம்
ஃப்ரஷ் பட்டாணி – 50 கிராம்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

 

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

* கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.

* கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, சுமார் 5 கப் தண்ணீர், அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக விடவும். வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது, உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.

* வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சுவையான கம்பு சேமியா புலாவ் தயார்.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை  பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalaimalar

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

 

தேவையான பொருட்கள் :

வல்லாரை கீரை – 1 கப்,
பாசிப்பருப்பு – 1 டீஸ்பூன்,
பூண்டு – 4,
சின்ன வெங்காயம் – 10,
மிளகு – சிறிது,
சீரகம் – சிறிது,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பட்டை – 1,
லவங்கம் – 1.

செய்முறை :

* கீரை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் 1 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்த பின் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பருப்பு, கீரை சேர்த்து சிறிது வதக்கிய பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் போட்டு வேக வைக்கவும்.

* குக்கர் விசில் ஆறியதும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டி கொள்ளவும்.

* வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

* சூப்பரான வல்லாரை கீரை சூப் ரெடி.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான இந்த வல்லாரை கீரை சூப் அருந்தலாம்.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை  பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalaimalar 

வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு

 தேவையான பொருட்கள் :

வெந்தயம் – ஒரு கைப்பிடி அளவு,
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 20 பற்கள்,
புளி – நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – ஒன்று,  
கறிவேப்பிலை – சிறிதளவு,
குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் –  2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை :  

* புளியை கரைத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பிறகு உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். (குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்).

* சூப்பரான வெந்தயக்குழம்பு ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை  பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalaimalar

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

சோள ரவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

மக்காசோள ரவை – ஒரு கப்,
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – அரை கப்.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். (இந்த ரவை வேக, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ளும்) இதில், பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

* தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைப் போட்டு அடுப்பை `சிம்’மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும், இறக்கி ஆறவைக்கவும்.

* மாவு ஆறி கையில் பிடிக்கும் பதத்தில் வந்ததும், கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை  பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalaimalar

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

 இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – 50 கிராம்,
கேழ்வரகு மாவு – 200 கிராம்,
உப்பு – சுவைக்கேற்ப,
சின்ன வெங்காயம் – 10,
தயிர் – கால் கப்,
தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை:

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

 

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

* அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

* தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

* பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை  பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalaimalar

 

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

 உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 சத்து நிறைந்த கொள்ளு கார அடை

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 2 கப்,
அரிசி – 1/4 கப்,
காய்ந்த மிளகாய் – 5,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க…

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – பாதி
இஞ்சி – சிறிய துண்டு,
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொள்ளு, அரிசியினை சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை  பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalamalar

உடல் எடையை குறைக்கும் கொள்ளு குழம்பு

உடல் எடையை குறைக்கும் கொள்ளு குழம்பு

 
தேவையான பொருட்கள் :

கொள்ளு – 200 கிராம்,
பெரிய வெங்காயம் – 200 கிராம்,
தக்காளி – 200 கிராம்,
பச்சைமிளகாய் – 5,
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
காய்ந்தமிளகாய் – 5,
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
புளி – 50 கிராம்,
நல்லெண்ணெய் – 200 மி.லி.,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். பொடியாக நறுக்க வேண்டாம்.

* கொள்ளுவை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

* கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்த பின் சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூளை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்த கொள்ளு, தேவையான அளவு உப்பு போட்டு குழம்பு திக்கான பதம் வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* கடைசியாக குழம்பை இறக்கும் போது கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.

* சுவையான கொள்ளு குழம்பு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை  பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalaimalar