ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் செய்யும் முறை

images (1)

ஆகாய தாமரையானது, நீரில் இருந்து (Nitrogen, potassium and phosphorus) தாதுக்களை எடுத்து கொள்கிறது. அதனால், இதனின் இலைகள் கம்போஸ்ட் செய்ய பயன் படுத்தலாம். இந்த கம்போச்டில் மண் புழுக்கள் சாதாரண கம்போச்டை விட நன்றாக வளர்கிறது.

ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் செய்யும் முறை:

images

ஆகாய தாமரையும், மாட்டு சாணமும் 1:3 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்
இந்த கலவையை 50 நாட்களுக்கு விட்டு வைக்க வேண்டும்
மக்கிய இந்த கலவையை மண் புழுவிர்கான வேர்மிபோஸ்ட் இடத்தில போட வேண்டும்.
ஒரு டன்னிற்கு 1500 என்ற கணக்கில் மண்புழுவை இந்த மக்கிய கலவையில் போட வேண்டும்
55நாட்கள் பின்னல் வெர்மி கம்போஸ்ட் ரெடியாகி விடும்.
ஆகாய தாமரை மூலம் கம்போச்டில் 4590 மண்புழுக்களும், சாதாரண கம்போச்டில் 2610 மண்புழுக்களும் இருந்தன.
மேலும், ஆகாய தாமரை கம்போச்டில், மண் புழுக்கள் ஆரோக்யமாகவும், நீளமாகவும் இருந்தன.
ஆகாய தாமரை மூலம் செய்ய படும் கம்போச்டில் இருந்து விரைவாகவும், நல்லதுமான எண்ணிக்கையில் அதிகமாகவும் மண்புழு கம்போஸ்ட் நமக்கு கிடைக்கிறது.

images

மேலும் விவரங்களுக்கு அணுகுவீர்:

தலைவர், தோட்டத்துறை ஆராய்ச்சி நிலையம் (Horticultural Research Station), தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், பின்: 643 001, தொலைபேசி: 04232442170

 

Leave a comment