Food Safety Enforcement News – Tamilnadu this week – April 23

GENERAL

COIMBATORE

PERAMBALUR

 

RAMANATHAPURAM

SALEM

TUTICORIN

இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இறைச்சி கடைகள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள ஒருசில இறைச்சி கடைகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சோதனை நடத்த மாவட்ட கலெக்டர் ரவிகுமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ராஜாமணி மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், அரிகணேஷ், ராஜபாண்டியன், கண்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், கால்நடை டாக்டர் ஜோசப்ராஜ், வருவாய் அலுவலர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள பன்றி, ஆடு, மாடு இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

பறிமுதல்

இந்த சோதனையில் ஐஸ் பெட்டியில் வைத்து பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இறைச்சி 4 முதல் 5 நாட்கள் பதப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பனைக்காக வைத்து இருந்த கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சிக்கு சொந்தமான லாரிகள் மூலம் தருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மாநகராட்சி குப்பை கிடங்களில் குழி தோண்டி கிருமி நாசினி தெளித்து புதைக்கப்பட்டது.

இனி இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

TIRUPUR

40

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  உணவுப் பாதுகாப்புத் துறை செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில்  நடைபெற்றது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

கோடை காலமாக இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாக்கெட், பாட்டில் மற்றும் கேன்கள் தரமாக உள்ளதா எனவும் பாக்கெட்டுகளில் தயாரிப்பு முகவரி/ தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பழக்கடைகள் மற்றும் குளிர்பானக் கடைகளில் விற்கப்படும் பழங்கள், குளிர்பானங்கள், குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் ஐஸ், மோர், சர்பத் மற்றும் தண்ணீர் தரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டுமெனவும், தெருவோர சாலைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் தேநீர் மற்றும் போண்டா/ பஜ்ஜி போன்ற திண்பண்டங்களின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், நடைபாதையோரம் விற்கப்படும் இறைச்சி/கோழி-மீன் கடைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து விற்பனை செய்ய வேண்டுமெனவும், இறைச்சி கடைகளில் விற்கப்படும் இறைச்சிகள், வதைக்கூடத்தில்  மருத்துவரின் சான்று பெற்ற பின்னரே இறைச்சிகள் விற்பனை செய்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த உணவு வணிக நிறுவனங்களான

உணவு பாதுகாப்பு

நியாய விலை கடைகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் கூட்டுறவு அங்காடிகள், அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகங்கள், கோவில் அன்னதான மையங்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு உணவு விடுதிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி சத்துணவு மையங்கள் ஆகியவை உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம்/பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பண்டிகைக்காலங்களில் மற்றும் கோவில் திருவிழாக்களின்போது இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த செயல் அலுவலர்கள் அந்தந்த பகுதியைச் சேர்ந்த உணவுப்பாதுகாப்பு அலுவலர்களை சந்தித்து தெருவோரமாக விற்பனை செய்யும்  கடை ஒப்பந்ததாரர்களிடம் கடைகளை ஏலம் விடும்போது  உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்கள்.

               மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிறுவணிகர்கள் முதல் அனைத்து உணவு வணிகர்களும் மற்றும் தனியார் மறுவாழ்வு இல்ல காப்பகங்கள் (ழுசிhயயெபந) உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம்/பதிவுச் சான்று பெற்று வணிகம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

               இக்கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்                      மரு. தமிழ்செல்வன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VELLORE

VILUPURAM

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s