பன்னீர் சோடாவில் தவளை : ரூ.12 ஆயிரம் நஷ்டஈடு

கடலுார்:

தவளை இறந்து கிடந்த பன்னீர் சோடாவை குடித்த சிறுமிக்கு, நஷ்ட ஈடாக, 12 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த, சுமதியின் மகள் சூர்யா, 12. கடந்த 2014 ஜூலை, 22ல், போடிசெட்டி தெருவில் உள்ள கடையில், பன்னீர் சோடா வாங்கிக் குடித்தார். சோடா துர்நாற்றம் வீசியதால், பாட்டிலை பார்த்த போது, தவளை குஞ்சு இறந்து கிடந்ததை கண்டு, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பின், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதை தொடர்ந்து, சிறுமி குடித்த சோடாவை தயாரித்த சோடா கம்பெனியை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, கம்பெனி உரிமையாளருக்கு, ‘நோட்டீஸ்’ வழங்கினர்.
மேலும், சிறுமியின் தாய் சுமதி, கடலுார் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மோனி, உறுப்பினர் எழிலரசி ஆகியோர், ‘தவளை இறந்து கிடந்த சோடாவை குடித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவிற்கு, 2,000 ரூபாயை, சோடா கம்பெனி உரிமையாளர், இரு மாதங்களில் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s