காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

காலை உணவிற்கு கேழ்வரகை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு, கேரட் சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு - கேரட் ரொட்டி
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கேரட் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை- 1 கைப்பிடியளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* இந்தக் கலவையில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.

* சுவையான கேழ்வரகு கேரட் ரொட்டி தயார்

* இது காலை உணவிற்கு உகந்த சத்தான உணவாகும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Maalaimalar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s