Food Safety News – Tamilnadu updates – Feb – 17-2017

paper new-vpm

அங்கன்வாடி பணியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்

உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அவிநாசி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திவ்யா, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ராமசாமி (அவிநாசி), சரவணகுமார்(பெருமாநல்லூர்), விஜயராஜா (பல்லடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பள்ளி மாணவர்களுக்காக உணவு தயாரிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், கைவிரல் நகங்களை ஒட்ட நறுக்கியும், தலைக்குத் தொப்பி அணிந்தும், கையுறை அணிந்தும் சமைக்க வேண்டும் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து சமைக்க வேன்டும். காலாவதியான உணவுப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. அயோடின் கலந்த உப்பைத்தான் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் உடல்நலம் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என வலுயுறுத்தப்பட்டது.

இறந்த கோழியை சமைத்தால்’;தள்ளுவண்டி கடைக்கு எச்சரிக்கை

திருப்பூர் ;”பண்ணைகளில், இறந்த கோழியை வாங்கி சமைப்பது, பழைய எண்ணெய் பயன்படுத்தினால், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென, உ<ணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், ரோட்டோர கடை மற்றும் தள்ளுவண்டி வியா பாரிகளுடன் ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது. நியமன அலுவலர் தமிழ் செல்வம், கடைக்காரர்களுக்கு வழங்கிய அறிவுரைகள் வருமாறு:சாக்கடை கால்வாய் அருகே, உணவு பரிமாறக்கூடாது; ஈ, கொசு போன்றவை புகாத வகையில், கண்ணாடி பெட்டிகள் பயன்படுத்த வேண்டும். வாகனங்களின் புகை மற்றும் ரோட்டில் கிளம்பும் புழுதி, உணவுப் பொருட்கள் மீது படியக்கூடாது. இறைச்சிகள், சுகாதாரமாக இருக்க வேண்டும்; இறைச்சி வாங்கியதற்கான “பில்’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
எந்த காரணத்தை முன்னிட்டும், பண்ணைகளில் நோயுற்று இறந்த கோழியை வாங்கி சமைக்கக்கூடாது. உணவில், சாயப்பொடி உள்ளிட்டவை சேர்க்கக்கூடாது. சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய், முறையாக மாற்றப்பட வேண் டும்; பழைய எண்ணெய் பயன்படுத்தினால், பறிமுதல் செய்வதோடு, உரிமமும் ரத்து செய்யப்படும். பாதுகாப்பான முறையில், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். மூடிய, குழாய் பொருத்திய பாத்திரம் மூலமே, குடிநீர் வழங்க வேண்டும். ஊழியர்கள் சுத்தமாக இருந்து, சுகாதார முறையில் உணவு தயாரித்து பரிமாற வேண்டும்.உணவு வகைகளை செய்தித்தாளில் வைத்து வழங்கக்கூடாது. பாக்குமட்டை, இலை அல்லது சில்வர் பாயில் காகிதம் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கவர்களில், பார்சல் வழங்கக்கூடாது.இவ்வாறு, அவர் எச்சரித்தார்.

வடபழனி வள்ளி திருமண மண்டபத்தில் கோவில் பிரசாத பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

சென்னை,
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அன்னதானக்கூடம் மற்றும் பிரசாத கடைகளில் வழங்கப்படும் பிரசாதங்கள், உணவு வகைகள் சுத்தம், பாதுகாப்பு மற்றும் தரமானதாக தயாரிப்பதற்கான சிறப்பு பயிற்சி சென்னை வடபழனி வள்ளி திருமண மண்டபத்தில் தொடங்கியது.
இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்துதல் ஆணையம் மற்றும் அதனுடைய தமிழ்நாடு பிரிவுடன் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் இப்பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பயிற்சி முகாமானது இன்றுடன் முடிவடைகிறது.
இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் உள்ள அன்னதானக்கூடம் மற்றும் பிரசாதக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை செயலாளர் அமுதா, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மா.வீரசண்முகமணி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய இயக்குனர் டாக்டர் சுனிதி டோட்ஜா, கூடுதல் கமிஷனர் டாக்டர் வனஜா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ந.திருமகள், இணை கமிஷனர் அ.தி.பரஞ்ஜோதி, பயிற்சி அதிகாரி டாக்டர் கவிதா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

திருச்சி:காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் காலாவதியான குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டன. சமயபுரம் கண்ணூர் பேருராட்சியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி ஆய்வு செய்தனர். இதில், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கும் பணிகள் இன்று நடைபெற்றது. அப்போது, சுமார் 500 லிட்டர் குளிர்பானம் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s