Food Safety News – Tamilnadu updates – Feb -11-2017

சென்னை

கோயம்பேட்டில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

 

கோயம்பேட்டில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

ஓட்டல்களில் உணவு பொருட்களை செய்தித்தாள்களில் கட்டிக்கொடுக்கக்கூடாது என்று உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த உணவை சாப்பிடுபவர்களின் உடலில் ரசாயனம் கலந்து நோய்களை ஏற்படுத்துகிறது.
இதை தடுக்கும் விதமாகவும், இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னை அண்ணாநகர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அண்ணா நகர் உணவு கட்டுப்பாடு ஆய்வாளர் சதாசிவம் தலைமையிலான அதிகாரிகள் சென்னை அமைந்தகரை, டி.பி.சத்திரம், கோயம்பேடு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள், சாலையோர கடைகளில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
பின்னர் அந்த கடைகளில் போண்டா, பஜ்ஜி, சமோசா, பிரியாணி, தக்காளி சாதம் போன்ற உணவு பொருட்களை செய்தித்தாள்களில் கட்டி கொடுக்கக்கூடாது என்றும், அதை உண்பவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கடைக்காரர்களிடம் கொடுத்து, விளக்கி கூறினர்.
அதையும் மீறி ஓட்டல்கள், கடைகளில் செய்தித்தாள்களில் உணவு பொருட்களை கட்டிக்கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்

குமரி

அனுமதியின்றி இறைச்சிக்கடை நடத்தினால் 6 மாதம் சிறை

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இறைச்சிக்கடை நடத்தினால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார் கோட்டாட்சியர் ராஜ்குமார்.
மாவட்டத்தில் சாலை ஓரங்களில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகளால் சுகாதாரக்கேடு நிலவுவதாக ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாணுக்கு தொடர் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நாகர்கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி க்கடைகளில் இருந்து இறைச்சிக் கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டப்படி இறைச்சி கடைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நல அலுவலர் கருணாகரன், சங்கரபாண்டியன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமாரதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசியது; அனுமதியின்றியும், விதிமுறைகளை பின்பற்றாமலும் இறைச்சிகடைகள் நடத்தினால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டப்படி ரூ.5 லட்சம் வரையிலான அபராதத் தொகை விதிக்கப்படும். மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கலாம். எனவே இறைச்சிக்கடை வைத்திருப்போர்கள் உரிய அனுமதி சான்று பெற்று நடத்த வேண்டும் என்றார் அவர்.

ராமநாதபுரம்

மேலும் மூன்று குடிநீர் நிறுவனங்களுக்கு சீல்

ராமநாதபுரத்தில் மேலும் மூன்று குடிநீர் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர்.
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுமதி இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 23 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களில் ஏழு மட்டுமே ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தர பரிசோதனை செய்து முறையாக செயல்படுகின்றன.
மற்ற 16 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களும் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 2016 ஜூன் 8 மற்றும் அக்.,6 தேதிகளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் இதன் உரிமையாளர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாத இவற்றை பூட்டி சீல் வைக்க உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் நடவடிக்கையில் இறங்கினார்.
பட்டணம்காத்தான் ஊராட்சி முனியசாமிநகர்(வடக்கு) பகுதியில் செயல்பட்ட ‘அல்ட்ரா பியூர்’ கழுகூரணியில் செயல்பட்ட வான்மழை, மீனா அக்வா மற்றும் சங்கந்தியான்வலசையில் டி.ஆர்.எஸ்.அக்வா ஆகிய மினரல் வாட்டர் தயாரிப்பு கம்பெனிகளுக்கும் சீல் வைத்தனர்.
இரண்டாவது நாளில், ரெகுநாதபுரத்தில் ‘ஸ்நோ டிராப்ஸ்’ ஆற்றங்கரையில் ‘ஆதித்யா மினரல் வாட்டர்,’ கீழக்கரையில் ‘ஸ்டார் பிரஷ்’ ஆகிய மேலும் மூன்று நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். ஆர்.எஸ்.மங்கலம் கோடை இடி தண்ணீர் கம்பெனியில் இன்னும் உற்பத்தி துவங்கவில்லை. கீழக்கரை பவர் வாட்டர் சப்ளையில், கேன்களில் சப்ளை இல்லை.
இதனால் இவர்களிடம் எழுதி வாங்கப்பட்டதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்தார்.

தேனி

 நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு பொருட்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சித்ரா வரவேற்றார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுகுணா தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு பற்றிய சட்டம் மற்றும் விதிகள், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி விளக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை சாப்பிடுவதால் உணவு எவ்வாறு விஷத்தன்மையை அடையும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லுாரி இணைச் செயலாளர் காளிராஜ், விடுதி செயலாளர் சேகர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜன், ஜனகஜோதிநாதன், பழனிச்சாமி, செந்தில்ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். விடுதி துணை காப்பாளர் பூர்ணா நன்றி கூறினார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s