இறைச்சி வெட்டுபவர்களுக்கு மருத்துவ தகுதி சான்று அவசியம் : உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுரை

நாகர்கோவில்: இறைச்சி கடை விற்பனையாளர்கள் கண்டிப்பாக மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும் எ்ன்று உணவு பாதுகாப்பு அலுவலர் கூறினார்.
நாகர்கோவில் நகரில் சாலை ஓரங்களில் இயங்கும் இறைச்சி கடைகளால் பொதுமக்கள்  பாதிக்கப்படுவதாக புகார் வந்தது. இதன் பேரில் அவ்வப்போது நகர பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வரும் இறைச்சி கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் உணவு பாதுகாப்பு சட்டப்படி இறைச்சி கடைகள்  பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நல அலுவலர் கருணாகரன், அலுவலர் சங்கர பாண்டியன், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் குமாரதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாகரன் கூறியதாவது : இறைச்சி கடையானது காய்கறி, மீன் அல்லது பிற உணவு பொருட்கள் சந்தைகளுடன் தொடர்பற்று விலகி இருக்க வேண்டும். இறைச்சி கடையின் உயரம் 3 மீட்டரும், குளிர் சாதன வசதி செய்யப்பட்டு இருந்தால் 2.5 மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். நீர் உள் நுழையாத படி தரைப்பகுதிகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.  விற்பனை செய்யப்படும் இறைச்சியின் வகை அனைவருக்கும் தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்க வேண்டும். கழிவு நீர் வசதிக்கான வடிகால் வசதி இருக்க வேண்டும். கழிவு பொருட்களை சேகரிக்க குப்பை கலன்கள் பயன்படுத்தப்பட வேண்டும். பணியிடத்தில் உண்ணுதல், துப்புதல், புகையிலை, வெற்றிலை போடுதல் ஆகியவை கூடாது. புகைபிடிக்க கூடாது. எச்சில் துப்பக்கூடாது என்ற வாசகம் எழுதி வைத்திருக்க வேண்டும். கடை பணியாளர்களுக்கு மருத்துவ தகுதி சான்று பெற்று இருக்க வேண்டும்.
தினமும் வியாபாரம் முடிந்த பின் வெட்டு பலகைகளை சுடுநீரால் சுத்தம் செய்து, அதன் மேல்புறம் உப்பை கொட்டி மூடி வைத்து துப்புரவாக பராமரிக்க வேண்டும். வெட்டு கத்திகள், வெட்டு பலகைகள் 80 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட சுடுநீரில் சுத்தம் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் அல்லது காவல்துறையிடம் இருந்து ஆட்பேசபனையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும். அனுமதியின்றி இறைச்சி கடைகள் நடத்தக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் தெரு ஓரங்களில் கடைகள் அமைக்க கூடாது. இன்னும் 1 மாத காலத்துக்குள் கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்றார்.
கோட்டாட்சியர் ராஜ்குமார் கூறுகையில், உரிய அனுமதியின்றி விதிமுறைகளை பின்பற்றாமல் இறைச்சி கடைகள் நடத்தினால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 6மாதம் சிறை தண்டனையும் உண்டு என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s