Food Safety News – Tamilnadu updates – Jan 7

 

 

பொள்ளாச்சி :’ஆவின் பாலகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, வழக்கம்போல், உணவு பண்டங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும்,’ என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை மட்டும் அளித்து விட்டு திரும்பி சென்றனர். பொள்ளாச்சி பஸ்ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில், சுகாதாரமின்றி பலகாரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், கலர் கலராக விற்கப்படும் வடை, போண்டா, பக்கோடா, பஜ்ஜி பலகாரங்களில், கலரூட்டிகள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயில் தயாரிக்கப்படுவதால், வாங்கி சாப்பிடுவோர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆவின் பாலகங்களிலும் இதே நிலை தான் நீடிப்பதாக புகார் கூறப்பட்டது.

இங்கு ஆவின் பால் உள்ளிட்ட பால் பொருட்களை மட்டுமே விற்க வேண்டுமென்பது விதி. ஆனால், இதற்கு நேர்மாறாகத்தான் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து ‘தினமலரில்’ கடந்த 31ம் தேதி புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

இதனையடுத்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ், செல்வபாண்டி, காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட ஆவின் கடைகளிலும், தள்ளு வண்டி கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பலகாரங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு பேப்பர் பயன்படுத்தக்கூடாது; பலகாரங்கள் மூடிவைக்கப்பட வேண்டும்; திறந்தவெளியில் ஈ மொய்க்க கூடாது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மறுமுறை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினர். தரமான டீத்துாள் பயன்படுத்த வேண்டும்; பலகாரங்கள் கலராக தெரிய கலரூட்டிகள் பயன்படுத்த கூடாது போன்ற அறிவுரைகளும் வழங்கினர்.மேலும் விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுககப்படும் என எச்சரிக்கை மட்டும் அளித்து விட்டு வழக்கம் போல் திரும்பி சென்றனர்

விக்கிரவாண்டி :

விக்கிரவாண்டி பகுதியில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில், விக்கிரவாண்டி பஸ் நிலையம், கடை வீதி, பனையபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு நடந்தது.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், மொத்த, சில்லரை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், ஜர்தா, எம்.டி.எம் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 50 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை தீ வைத்து எரித்தனர். மேலும், இருப்பு வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’ வைத்து விற்பனையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட குழுவினர் உடனிருந்தன

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s