TN : Expired chocolates leads to food poisoning – 110 children admitted

தியாகதுருகம் அருகே காலாவதியான சாக்லேட்டுகள் தின்ற 110 மாணவ-மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலாவதியான சாக்லேட்டுகள் தின்ற 110 மாணவ-மாணவிகள் மயக்கம்

 

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ளது கூத்தக்குடி. இங்குள்ள ரெயில் நிலையம் அருகே பை-பாஸ் சாலையில் ஏராளமான சாக்லேட்டுகள் கொட்டிக்கிடந்தன.

இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்ற மாணவ-மாணவிகள் ரோட்டில் சாக்லேட் கொட்டி கிடப்பதை பார்த்து உற்சாகமானார்கள்.

ஓடோடிச் சென்று சாக்லேட்டுகளை எடுத்து தங்கள் பைகளில் திணித்துக் கொண்டனர். சிலர் ஆர்வ மிகுதியால் அந்த இடத்திலேயே சாக்லேட்டுகளை சுவைத்தனர். அதன் பின்னர் பள்ளி களுக்குச் சென்று விட்டனர்.

வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. பதறிப்போன ஆசிரியர்கள் என்ன? ஏது? என்று விசாரித்த போது ரோட்டில் கொட்டிக்கிடந்த சாக்லேட்டுகளை தின்றதாக கூறினார்கள்.

எனவே ஆசிரியர்கள் அந்த மாணவ- மாணவிகளை உடனடியாக கூத்தக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே 2 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் 110 பேர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அனைத்து மாணவ- மாணவிகளையும் அந்த பகுதியில் உள்ள வாகனங்களில் ஏற்றி கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவ- மாணவிகள் மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல் கூத்தக்குடி கிராமத்தில் காட்டுத்தீயாக பரவியது. பதறியடித்தபடி பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு ஓடோடி வந்தனர். ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

மயக்கம் அடைந்த 110 மாணவ- மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்க கூத்தக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் ரிஷிவந்தியம், தியாகதுருகம் ஆஸ்பத்திரிகளில் இருந்து கூடுதலாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து அங்கேயே முகாமிட்டு மாணவ- மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வரஞ்சிம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணையில் ரோட்டில் கொட்டி கிடந்தது காலாவதியான சாக்லேட்டுகள் என்பது தெரிய வந்தது. அதனை கொட்டிச் சென்றவர்கள் யார்? என்பதை அறிய தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

சம்பவம் பற்றி அறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விரைந்தனர். அவர்கள் அங்கு கிடந்த சாக்லேட்டுகளை சேகரித்தனர். அவை கிண்டியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s