Lizard in water tank, 8 Anganwadi children admitted in hospital

தர்மபுரி: தர்மபுரி அருகே, அங்கான்வாடி மையத்தில், பல்லி விழுந்த குடிநீரை குடித்த குழந்தைகள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி அடுத்த சோகத்துார் அங்கன்வாடி மையத்தில், மேட்டு தெருவை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். நேற்று அங்கான்வாடி மையத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த குழந்தைகளின் பெற்றோர், தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அங்கன்வாடி பொறுப்பாளர் மாரம்மாளிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த போது. அதில், பல்லி இறந்து மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, தண்ணீர் குடித்த சோகத்துார் மேட்டு தெருவை சேர்ந்த குணசேகரன் மகள் பிரித்தா,  குமார் மகன் கவுதமன்,  வீரமணி மகள் ஜீவிதா, பார்த்திபன் மகன் ஜானகிராமன், முருகேசன் மகள் சகானாஸ்ரீ,  உட்பட, எட்டு குழந்தைகளை, அவர்களது பெற்றோர்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s