HC stays water drawal from Tambiraparani

Madurai hc

குளிர்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரபாகர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் அதிகளவு தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், குளிர்பான நிறுவனங்கள் ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுப்பதற்கு 37 ரூபாய் 50 காசுகள் மட்டுமே கட்டணமாக வழங்குவதாகவும் தனது மனுவில் பிரபாகர் சுட்டிக்காட்டியிருந்தார். குறைந்தவிலைக்கு தண்ணீரை வாங்கும் நிறுவனங்கள், குளிர்பானமாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகவும் அதிக விலைக்கு விற்பதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதனால், தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என பிரபாகர் வலியுறுத்தியிருந்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s