Crop Insurance Scheme – A boon to farmers

தமிழகத்தில், பெரும்பாலும் மழை, வெள்ளம், மண்சரிவு போன்றவற்றால் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பெரும் இழப்பு ஏற்படுகிறது. வனம் மற்றும் மலையோரங்களில் வன உயிரினங்களால் பெரும் பயிர்சேதம் ஏற்படுகிறது.ஆனாலும், பெரும்பாலான இடங்களில் பருவமழை தவறுவதால், பாசன நீர் இல்லாமல் ஏற்படும் கடும் வறட்சியால் பயிர்கள் மட்டுமல்ல, மரங்களும் பட்டுப்போகின்றன. சமீபத்தில், பயிர்களை காப்பாற்ற முடியாவிட்டாலும், இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதம் ஏற்பட்டால், மாநில அரசின் மானியத்துடன், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ திட்டத்தின் மூலம் இழப்பீடு பெறலாம் என அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில், வேளாண்மையில் நிலையான உற்பத்தி மற்றும் வருமானத்தில் நிலைக்கச் செய்தல், நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாய பெருமக்களை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பதுடன் வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தில் சேர தகுதிகள்அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில், அறிவிக்கப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் திட்டத்தில் சேரலாம். பயிர்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் சேர்க்கப்படுவர்.

பயிர்காப்பீடு நிலைகள்:விதைப்பின்போது வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை, விதைப்பு முதல் அறுவடை காலம் உள்ள காலத்துக்கு, அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புக்கு, புயல் ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு செய்யலாம்.

நெல், சோளம், மக்காச்சோளம், பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, கரும்பு, மஞ்சள்,

வெங்காயம், வாழை மற்றும் மரவள்ளி ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யலாம்.

ஒரு சில பயிர்களுக்கு விவசாயிகள் செலுத்தும் பிரிமியம் தொகையை விட அரசு செலுத்தும் தொகை அதிகம். அதே நேரம், வணிக பயிர்களுக்கு விவசாயிகள் செலுத்தும் தொகையை விட அரசு செலுத்தும் தொகை குறைவாகும்.குறிப்பாக, சோளம், மக்காச்சோளம், உளுந்து, வாழை,

வெங்காயம் போன்ற பயிர்களுக்கு விவசாயிகளின் பிரிமியம் தொகையை விட, அரசு மூன்று மடங்குக்கு கூடுதலாக பிரிமியம் செலுத்துகிறது.

சோளத்துக்கு ஏக்கருக்கு, 8,900 ரூபாயும், இதற்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை ஏக்கருக்கு, 133.50 ரூபாய் மட்டுமே. மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு, 21 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு, 315 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வேளாண்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் அடையாள அட்டை, முகவரி சான்று, நிலஉடைமை சான்று, வங்கிக்கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் அப்பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் காப்பீட்டு தொகை செலுத்தி திட்டத்தில் சேரலாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s