Adulterated Tea sales in full swing – Will Food Safety Dept act ?

முதுகுளத்துார், முதுகுளத்துாரில் டீ கடைகளை குறிவைத்து கலப்பட டீ துாள் விற்பனை ஜரூராக நடக்கிறது.
முதுகுளத்துார் பஜார், காந்தி சிலை, தேரிருவேலி விலக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட டீ கடைகள் உள்ளது.
இவற்றில் ஒருசில கடைகளில் மட்டும் கம்பெனி தயாரிப்பு டீ துாள் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள அனைத்து டீ கடைகளிலும் கலப்பட டீ துாளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சாயம் கலந்த ‘டபுள் பேரட், ரெட் போர்ட்’ என்கின்ற பெயர்களில் போலி டீ துாள் ஒளிவு, மறைவின்றி விற்பனை செய்யப்படுகிறது.
இவை பெரும்பாலும் டீ கடைகளை குறிவைத்தே விற்பனையாகிறது. விலை குறைவு, நிறம் அதிகம் என்பதால் கலப்பட டீ துாளை, டீ கடை நடத்துபவரகள் விரும்பி வாங்குகின்றனர்.
இவ்வகை டீ துாளை பயன்படுத்தி தயார் செய்யப்படும் டீயினை அருந்துபவர்கள் வயிற்று புண், பசியின்மை உள்ளிட்ட உபாதைகளுக்கு உள்ளாகி உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கலப்பட டீ துாள் விற்பனையை அடியோடு ஒழிக்க உணவுத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s