Food Safety News – Tamilnadu Updates – Oct 19

ஓசூரில் தயாராகும் தரமற்ற பிரியாணி: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறட்டை

ஓசூர்: ஓசூரில், கலர் பொடி மற்றும் பல நாட்களுக்கு முன் வெட்டப்பட்ட கோழி இறைச்சியில், பிரியாணி தயார் செய்யப்படுவதால், அதை சாப்பிடும் மக்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்படுகிறது. ஆனால், இதையெல்லாம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

தொழில் நகரமான ஓசூரில், பிரியாணி கடைகளுக்கு பஞ்சமில்லை. தாலுகா அலுவலக சாலை, ராயக்கோட்டை சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில், பல பெயர்களில் பிரியாணி கடைகள் புதிது, புதிதாக முளைத்து வருகின்றன. ஆனால், இந்த கடைகளில் தயாராகும், பிரியாணியின் தரம் மட்டும் கேள்விக்குறியாக உள்ளது. கோழி பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் இறைச்சி, பிரிட்ஜில் பல நாள் வைக்கப்பட்டு, பிரியாணிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை அறிந்த, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களும், ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், ஓட்டல்களின் நிலையும் மிக மோசமாக உள்ளது. கடும் துர்நாற்றத்தின் பிடியில் அமர்ந்து தான் மக்கள் சாப்பிட வேண்டியுள்ளது. கோழியின் விலை தினமும் மாறும் என்பதால், பல ஹோட்டல் நிர்வாகம், விலை குறைந்த நாட்களில் கூடுதலாக கோழி இறைச்சிகளை வாங்கி, பிரிட்ஜில் இருப்பு வைத்து விடுகின்றன. இதை தான் பல்வேறு நாட்களுக்கு பிரியாணிக்கு பயன்படுத்துகின்றன. சிறிய ஓட்டல்களில் துவங்கி, பெரிய ஓட்டல்கள் வரை இதே நிலை தான் தொடர்கிறது. முதல் நாள் விற்பனையாகாமல் மீதமாகும் பிரியாணியில் இருந்து கோழி இறைச்சிகளை மட்டும் தனியாக எடுத்து, அடுத்த நாள் புதிதாக தயாரிக்கும் பிரியாணியில் கலக்கும் சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது. இது போன்ற தரமற்ற முறையில் தயாராகும் பிரியாணியை சாப்பிடும் பொதுமக்களுக்கு, வயிறு உபாதைகள், வாந்தி, பேதி ஆகியவை ஏற்படுகிறது. அத்துடன், பிரியாணியில் கலர் கொண்டு வருவதற்காக, கலர் பொடி கலக்கப்படுவதால், பல நேரங்களில் பிரியாணி கசப்பு தன்மை அடைகிறது. மக்களுக்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் பிரியாணி கடைகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சிதம்பரத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிபகங்கள், பேக்கரி உரிமையாளர்கள், தொழில்புரிவோர்க்கான உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் தெற்கு வீதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி தலைமை வகித்தார். சிதம்பரம் உணவு பாதுகாப்பு அதிகாரி பத்மநாதன் உள்ளிட்ட சுற்றுவட்டத்தில் உள்ள அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

 

இந்த கூட்டத்தில் சிதம்பரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இனிபக மற்றும் பேக்கரி உரிமையாளர்கள், தொழில்புரிவோர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தீபாவளி நேரத்தில் அதிகாமாக தாயாரிப்பு பணிகள் இருக்கும் அப்போது தயாரிப்பு கூடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், தரமாண மூலப்பொருட்கள் மூலம் தயாரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.

இனிப்பு, கார வகைகளில் செயற்கை வண்ணம் சேர்க்ககூடாது, தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் சுத்தமான ஆடைகள், நகங்களை வெட்டி சுத்தமாக இருத்தல் வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட அதிகாரி வழங்கினார்.

திருப்பத்தூர் கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கடைவீதிகளில் காலாவதியான உணவு பொருள்கள் மற்றும் புகையிலை விற்பனை குறித்து செவ்வாய்கிழமையன்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதா வந்த புகாரையடுத்து செவ்வாய்கிழமையன்று உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் தலைமையில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை உள்ளிட்ட அலுவலர்கள் கடைவீதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பேருந்து நிலையம், பெரியகடைவீதீ, கரைக்குடிரோடு, மதுரை ரோடு, ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாககங்களில் உணவுப் பொருள்கள் காலாவதி குறித்தும் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஹோட்டல்களில் உணவு தயாரிப்பாளரின் உடைகள் மற்றும் கைசுத்தம் குறித்தும் ஆலோசனை வழங்கபட்டது. ஒருசில இடங்களில் தேதியில்லா குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட் திண்பண்டங்கள் கைப்பற்றப்பட்டு வியாபாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலக ஊழியரகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பேட்­டையில் ‘சல்­பிரைட் ஆக்­­ஸைடு’ கலந்த அச்­சு­ வெல்­லம் விற்­பனை

திரு­நெல்­வேலி::

பேட்­டையில் ‘சல்பிரை­­ட் ஆக்­ஸைடு’ கலந்த அச்­சு­வெல்­லத்தை விற்­பனை செய்த மளிகை கடை உரி­மை­யாளர் மீது உணவு பாது­காப்பு அலு­வலர் நெல்லை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்­துள்­ளார்.

பேட்­டையில் உள்ள ஒரு மளிகை கடையில், கடந்த ஜன­வரி மாதம் 27ம் தேதி, நெல்லை மண்­டல உணவு பாது­காப்பு அலு­வலர் காளி­முத்து, திடீ­ரென ஆய்வு செய்தார். அப்­போது மளிகை கடையில் விற்­பனை செய்­யப்­பட்டு வந்த அச்­சு­வெல்­லத்தை உணவு மாதி­ரி­யாக எடுத்து, சென்­னையில் உள்ள பகுப்­பாய்­­வுக்கு அனுப்பி வைத்தார். பகுப்­பாய்வில், அந்த அச்­சு­வெல்­லத்தில் ‘சல்­பி­ரைட் ஆக்ஸை­டு­’ கலந்து இருப்­பது உறு­தி­யா­­னது.

‘சல்­பி­ரைட் ஆக்ஸை­டு­’ கலந்த அச்­சு­வெல்­லத்தை விற்­பனை செய்­து­வந்த மளிகை கடை உரி­மை­யா­ள­ரான சின்­ன­மணி மீது வழக்­குப்­ப­திவு செய்ய, மாநில உணவு பாது­காப்பு ஆணையர்  அமுதா, மாவட்ட நிய­மன அலு­வலர் செந்­தில்­குமார் அனு­மதி அளித்­தனர். இந்த அனு­ம­தியைத் தொடர்ந்து, உணவு பாது­காப்பு அலு­வலர் காளி­முத்து, நெல்லை மாவட்ட ஜே.எம்.5 கோர்ட்டில், மளிகை கடை உரி­மை­யாளர் சின்­ன­மணி மீது வழக்­கு தாக்கல் செய்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s