நோய் பரப்பும் ஈக்கள், கொசுகளை தடுக்க ஓட்டல்களில் மின்சார வலை, தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவு

வேலூர்: வடகிழக்கு பருவமழையையொட்டி நோய் பரப்பும் ஈக்கள், கொசுக்களை தடுக்க ஓட்டல்களில்  வலை, தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Image result for mosquito net for windows

 

மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, மலேரியா, டெங்கு ஆகிய நோய்கள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Image result for flyaway insectocutor
மழைக்காலங்களில் தண்ணீர், தின்பண்டங்கள், உணவு வகைகள் மீது ஈ மற்றும் கொசுக்கள் உட்காருவதால் டைபாய்டு, காலரா மற்றும் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஓட்டல்களில் உணவு பொட்டலங்களை சாப்பிட்டு வெளியே போடக்கூடாது.
அதேபோல் தள்ளு வண்டியில் விநியோகம் செய்யும் உணவு பொட்டலங்களை சாப்பிட்டு தரையில் போடக்கூடாது. மேலும் டீ கடைகளில் டீ குடித்துவிட்டு பிளாஸ்டிக் தம்ளர்களை அங்கேயே போடக்கூடாது. இந்த பொருட்களை அப்படியே போடுவதால் அதன் மீது கொசுக்கள் மற்றும் ஈக்கள் மொய்க்கின்றன.
இதனை தடுக்கும் வகையில் தள்ளுவண்டிகளில் விநியோகம் செய்யும் உணவு பொட்டலங்களை ஈக்கள் மற்றும் கொசுக்கள் வராமல் தடுக்க நான்கு பக்கமும் தடுப்புகள் அமைக்க வேண்டும். ஓட்டல்களில்  வலை அமைக்கவேண்டும். அதேபோல் எலிகள் வராமலும் தடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். இவற்றை செய்ய தவறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s