10 lakh die every year due to Mosquito transmitted diseases

 

வேலுார்:”உலக அளவில், ஆண்டுக்கு சுமார், 10 லட்சம் பேர், கொசுக்கடியால் ஏற்படும் நோய்களால் உயிரிழக்கின்றனர்,” என, வேலுார் மண்டல பூச்சியியல் வல்லுனர் கோபாலரத்தினம் தெரிவித்தார்.வேலுார் மாவட்டம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மலேரியா, டெங்கு, சிக் குன் குனியா உள்ளிட்ட நோய்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. துணைவேந்தர் முருகன் தலைமை வகித்தார்.
இதில், பூச்சியியல் வல்லுனர் கோபாலரத்தினம் பேசியதாவது:பூமியில், 350 வகையான கொசுக்கள் இருக்கின்றன. அதில், மூன்று அல்லது, நான்கு வகை கொசுக்கள் மட்டுமே, நோய் பரப்புகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கொசுக் கடியால் மலேரியா, சிக் குன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் உண்டாகிறது.சில ஆண்டுகளுக்கு முன், மலேரியா பாதிப்புகள் அதிகமாக இருந்தன. தொடர் தடுப்பு நடவடிக்கையால், தற்போது அவற்றின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது.
தற்போது நாடெங்கும் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த டெங்கு காய்ச்சலுக்கு மருந்தும் இல்லை; தடுப்பு ஊசியும் இல்லை.உலக அளவில் ஆண்டுக்கு சுமார், 10 லட்சம் பேர் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களால் இறப்பதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலக அளவில் அபாயகரமான விலங்கினங்களின் பட்டியலில் சிங்கம், புலியை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தில் கொசு இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, கொசு ஒழிப்புக்காக, ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் செலவழித்தும், கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. எனவே, கொசுக்களை ஒழிக்க, அனைவரும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s