Baby dies eating rat poison – TN –

எலி கொல்லி மருந்தை சாப்பிட்ட குழந்தை பலி

மேச்சேரி: மேட்டூர் அருகே, எலிகொல்லி மருந்தை தெரியாமல் எடுத்து சாப்பிட்ட, ஒன்றரை வயது குழந்தை இறந்தது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த, எரகுண்டப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக். அவரது மனைவி அன்னபூரணி. அவர்களது ஒன்றரை வயது குழந்தை ஹரி. வீட்டில், எலித்தொல்லை அதிகமாக இருந்ததால், அதை கொல்ல, கார்த்திக் மருந்து வாங்கி, வீட்டில் வைத்துள்ளார். கடந்த, 6ம் தேதி வீட்டில் விளையாடிய ஹரி, தெரியாமல் எலி கொல்லி மருந்தை எடுத்து, சாப்பிட்டான். அதில், மயக்கம் அடைந்த குழந்தையை, பெற்றோர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, உடல்நலம் சரியானதாக கூறி, நேற்று முன்தினம், வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆனால், உடல்நலம் மீண்டும் பாதித்ததால், நேற்று முன்தினம் இரவு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரி, நேற்று காலை உயிரிழந்தான். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s